Saturday, 19 April 2014

துர்முகி வருஷ பலன்கள்






சுக்

புத சூர்


சந்

கே

துர்முகி வருஷம்






குரு(வ) ராகு





செவ்
சனி(வ)






மேஷ ராசி

இந்த வருடம் ராசிக்கு 8ல் சனி இருப்பதால் மந்தப்போக்கும் தடைகளும் மேலோங்கி இருக்கும். ஆகஸ்ட் வரை ராசிநாதன் செவ்வாயும் அஷ்டமத்தில் இருப்பதால் விபத்துகள், சிக்கல்களைத் தவிர்க்கவும். குரு பார்வை ராசிக்கு சாதகமாக ஜூலை வரை இருப்பது ஓரளவு ச்ரமங்களைக் குறைக்கும். மற்றபடி தசாபுக்திகள் நன்றாக இருந்தால் கவலைப்பட வேண்டாம்.


ரிஷப ராசி

பொதுவாக நன்மையான பலன்களைச் சொல்லலாம். 7மிடத்தில் சனி செவ்வாய் இருப்பது திருமண உறவுகளால் நன்மையே. புதிய கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு காதல் திருமண வாய்ப்பு உண்டு. சுக ஸ்தானத்தில் குருவுடன் ராகு சேர்க்கையால் இடம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படலாம். இடம் சம்பந்தப்பட்ட முயற்சிகளைத் தவிர்த்தல் நலம்.


மிதுன ராசி

பாவக் கிரகங்கள் உங்கள் தைர்ய பகை ஸ்தானங்களில் இருப்பதால் வீண் வம்புகள் வழக்குகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. சகோதர உறவுகள் சுமுகமாக இராது. இந்த வருடம் மனை, வீடு வாங்க உகந்தது. செலவுகள் சற்று அதிகரிக்கும். திருமண உறவுகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஜூலை முதல் நன்மைகள் ஏற்படும். உடல் ஆராக்யம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 


கடக ராசி

ராசிக்கு 2ல் ராகுவுடன் குரு சேர்ந்து இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவுகளும் இருக்கலாம். இருப்பினும் குடும்பத்தில் ஒற்றுமை இராது. குழந்தைகளுக்கு நன்மைகள் ஏற்படும். சிலருக்கு திருமண ஏற்பாடுகள் உறுதியாகும். முதலீடுகள் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். 


சிம்ம ராசி

ஜன்ம ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருப்பதால் முன்னேற்ற தடை, அவநம்பிக்கை, செயல்பாடு குறைவு ஆகியவற்றை ஏற்படுத்தும். இட மாற்றங்களுக்கும், இருக்கின்ற பழைய வீட்டை புதுப்பிக்கும் வாய்ப்புகளும் உண்டு. குழந்தைகள் விஷயங்கள் திருப்தியாக இராது. சிலருக்கு உடல் உபாதைகள் கூடும். ஜூலைக்கு பிறகு வருமானம் அதிகரிக்கும். அப்போது முதல் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.


கன்னி ராசி

ராசிக்கு தைர்ய ஸ்தானத்தில் இரு பாவர் இருப்பது எடுக்கின்ற செயல்கள் அனைத்தையும் வெற்றியாக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவினங்கள் ஏற்படும். ஹஸ்த நட்சத்தித்தில் பிறந்தவர்களுக்கு வேலைப்பழு பொறுப்புகள் கூடும். ஆகஸ்ட் முதல் குரு ஜன்ம ராசியில் வருவதால் நிதானம் தேவை. குருப்பெயர்ச்சி சிலருக்கு காதல் திருமண வாய்ப்பைத் தரும்.


துலா ராசி

ராசிக்கு தன ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் இருப்பதால் வருமானங்கள் இருந்த போதிலும் பற்றாக்குறை நிலவும். பொதுவாக அனைத்து நன்மைகளும் இந்த வருடம் வந்து சேரும். ஆகஸ்டுக்கு மேல் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். லாபத்தில் குரு ராகு சேர்க்கை இருப்பதால் பலவித உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


விருச்சிக ராசி

ஜன்ம ராசியில் சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும். ஆகஸ்டுக்கு மேல் உடல் நிலை சரியாகும். தொழில்நிலை முன்னேற்றமாக காணப்படும். ஜூலை முதல் வருமானங்கள் அதிகரிக்கும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால் சொத்து விஷயத்தில் கவனமாக இருக்கவும். 


தனுர் ராசி

ஜன்ம சனி நடப்பதால் சற்று மந்தமும் ஏமாற்றமும் மேலோங்கும். மனதில் கவலைகள் பயங்கள் ஏற்படும். குழந்தைகள் விஷயத்திலும் திருப்தியிராது. பாக்யத்தில் குரு ராகு சேர்க்கை முன்னேற்றத்தை தடை செய்யும். வெளி நாட்டு வாய்ப்புகள், பதவி உயர்வுகள் தாமதமாகலாம். ஆகஸ்டு முதல் நிலமை ஓரளவு சீராகும். 


மகர ராசி

தற்போதைய கிரக நிலை அலைச்சல், இடமாற்றம், அமைதியின்மை ஆகியவற்றை காட்டுகிறது. குரு பெயர்ச்சிக்குப் பின் இந்நிலை மாறும். உயர்கல்வி வாய்ப்பு, பதவி உயர்வு, வெளி நாட்டு வாய்ப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். சொத்துகளால் சிக்கல்கள் ஏற்படலாம். கவனமாக செயல்படவும். 


கும்ப ராசி

தொழில் ஸ்தானத்தில் சனி இருப்பினும் உடன் அந்த வீட்டு கிரகமான செவ்வாய் சேர்க்கை இருப்பதால் நல்ல முன்னேற்றம், வருமான உயர்வு ஏற்படும். ஆகஸ்டு முதல் சுமாரான பலன்களே. உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்படும். புதிய முயற்சிகளை ஆகஸ்டுக்கு முன்னரே செய்யவும். குழந்தைகள் விஷயங்கள் திருப்தி இராது.


மீன ராசி

திற்போதைய கிரக நிலைகள் திருப்தியாக இல்லை. பெரிய நன்மையோ தீமையோ இராது. உடல் ஆரோக்யம் மந்தமாகவே இருக்கும். ஆகஸ்டுக்கு மேல் திருமண வாய்ப்புகள் கைகூடும். அது வரை எந்த வம்பு வழக்குகளிலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். முன்னேற்றங்கள் மந்த கதியில் இருக்கும்.




No comments:

Post a Comment